நீ




தேவதைகள் பூமிக்கு வருவது இல்லை
அதற்கு  ஒரு காரணம்  உண்டு
நட்சத்திரம் வானில் தெரிவது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு
நிலவு பூமிக்கு அருகில்  இருப்பது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு
பூக்கள் பூமியில் பூப்பது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு

                         "நீ "


எழுதப்பட்ட காவியங்கள் பல இருந்தாலும்
எழுதபடாத காவியம் இங்கு உண்டு
கண்ணில்பட்ட அதிசயகள் பல இருந்தாலும்
கண்ணில்படாத அதிசயம் இங்கு உண்டு
கேட்கப்பட்ட குயிலின் ஓசை பல இருந்தாலும்
கேட்கபடாத குயிலின் ஓசை இங்கு உண்டு
திட்டப்பட்ட ஓவியம் பல இருந்தாலும்
வரையபடாத ஓவியம் இங்கு உண்டு
 
                            "நீ "

No comments:

Post a Comment