..............இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு............





 

 ..............இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு............



நான் என்ற அகந்தையில் வாழ்கின்றனர்
மனம் என்ற ஆறு வரண்டு இருக்கிறது இங்கு
இருள் அடைந்த குகை ஆழம் அறிய
இவர்கள் மனமும் தான்

மிருகங்கள் கூட தனக்கு ஏற்ற
துணையை தேட மனிதனுள் மட்டும் ஏன்
கருவறையில் காத்து இருந்து பிறவாமல்
உதித்த அரக்கன்களோ

கடை விதியில் பூத்த பூக்கள் காத்துஇருக்க
அரும்பை நட்டவனுக்கு தெரியாமல்
அறுக்கின்றனர்

கடவுள் கூட இதை தடுக்க அவதாரம் எடுக்கவில்லை
பாவங்கள் பல செய்தும் சிறகு முளைத்த
பட்டாம்பூச்சி போல் அடுத்த பூக்களை தேடுகின்றனர்
இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு
    

திருமணம் என்ற பேரில்




 
தனித்து உறங்கினான் சில வருடம்
திடீர் என்று ஒரு நாள் எங்கு இருந்தோ
வந்தவனுடன் உறங்க சொல்கிறார்கள் 
திருமணம் என்ற பேரில்
விலைமாதுகள் கூட பணம் வாங்கிறார்கள்   
படுபதற்கு  முன் ஆனால் இங்கு பணம் வங்கி  தான் படுகிறார்கள்
சிலர் இன்புபுற்று இருக்க...    
சிலர் இன்னும் காத்திருக்கிறார்கள்  நிலை மாற ...

நீ




தேவதைகள் பூமிக்கு வருவது இல்லை
அதற்கு  ஒரு காரணம்  உண்டு
நட்சத்திரம் வானில் தெரிவது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு
நிலவு பூமிக்கு அருகில்  இருப்பது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு
பூக்கள் பூமியில் பூப்பது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு

                         "நீ "


எழுதப்பட்ட காவியங்கள் பல இருந்தாலும்
எழுதபடாத காவியம் இங்கு உண்டு
கண்ணில்பட்ட அதிசயகள் பல இருந்தாலும்
கண்ணில்படாத அதிசயம் இங்கு உண்டு
கேட்கப்பட்ட குயிலின் ஓசை பல இருந்தாலும்
கேட்கபடாத குயிலின் ஓசை இங்கு உண்டு
திட்டப்பட்ட ஓவியம் பல இருந்தாலும்
வரையபடாத ஓவியம் இங்கு உண்டு
 
                            "நீ "

சாதி பிணம்தின்னிகள்..........




பூக்க வேண்டிய  பூக்களை பரிக்கவில்லை அழித்துவிட்டார்கள்
பூமியில் பூக்கள் பூப்பதற்காக அல்லவ  படைக்கபட்டது 
மாற்றாக இடுகாட்டில் போசிக்கிவிட்டார்கள் ....
புதைக்கப்பட வேண்டிய சாதி என்ற எழுத்துக்கு
இது போல் எத்தனை பூக்களின் வாழ்கையை கருக்குவர்கள்...
பாரதியார் பாடிய பாடல்கள் அனைத்தும்
நாடு முழுவதும் ஒலித்தாலும் இவர்கள்
வருந்தா மாட்டார்கள்  அதை எண்ணி
என்றும் திருந்த மாட்டார்கள் !

சாதி பிணம்தின்னிகள்..........

ஈந தலைகள்












 தீராத மழைத்துளிகளில் காகித 
ஓடமாய் நனைந்து கீற்றின் 
அசைதலின் நிழலை கண்டு 
சிங்கம் அச்சத்தின் உச்சியில் 
புலிகளின் பாதங்களில் இடறிய 
சருககளின் ஓசையை கேட்டு 
பின் சலனமற்ற கர்ஜனையுடன் .....

  
 குகையின் வாசலில் தலை மட்டும் தெரிய
 அங்கும் இங்கும் உருண்ட கண்கள் உடன்
  உறுதி கொண்டு பின் நான் தலை என்று
  உணர்த்தி ஊருக்குள் வாழும்  ஈந  தலைகள்
  என்று விழும் மண்ணில்.................

 

 

 

 

வாழ்கைக்கு தேவவை ஊனம் இல்லை
மனம் என்றார்கள் ஆனால்
மனதை களைந்துவிட்டு நடக்கிறார்கள்
ஊனம்மை சிலர்
ஊனத்தை களைந்துவிட்டு மனதை கொண்டு
நடக்கிறார்கள் சிலர்.........

அரக்கன்






 


நம்  நினைவுக்கு குட  எல்லையுண்டு
அனால் கடவுளுக்கு இல்லை ......
நம் அன்பிற்கும் எல்லையுண்டு
அனால்  தாய்க்கு  இல்லை ......
நம் கடலிற்கு எல்லையுண்டு
அனால் மீனுக்கு இல்லை ......
நம்  மூக்கிற்கு  எல்லையுண்டு
அனால் சுவாசிக்கும் காற்றுக்கு இல்லை ......
நம்  உண்ணவுகு எல்லையுண்டு
அனால் நெல்லிற்கு இல்லை ......
 நம் கேட்பதை  மட்டும் அளவு இல்லாமல்
 தானா கேட்கிறோம் கடவுளிடம் பிறகு  என்ன.
மனிதன் தெய்வமாக மாறவேண்டும்
மாறாக அரக்கன் ஆகிறான்