நீ




தேவதைகள் பூமிக்கு வருவது இல்லை
அதற்கு  ஒரு காரணம்  உண்டு
நட்சத்திரம் வானில் தெரிவது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு
நிலவு பூமிக்கு அருகில்  இருப்பது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு
பூக்கள் பூமியில் பூப்பது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு

                         "நீ "


எழுதப்பட்ட காவியங்கள் பல இருந்தாலும்
எழுதபடாத காவியம் இங்கு உண்டு
கண்ணில்பட்ட அதிசயகள் பல இருந்தாலும்
கண்ணில்படாத அதிசயம் இங்கு உண்டு
கேட்கப்பட்ட குயிலின் ஓசை பல இருந்தாலும்
கேட்கபடாத குயிலின் ஓசை இங்கு உண்டு
திட்டப்பட்ட ஓவியம் பல இருந்தாலும்
வரையபடாத ஓவியம் இங்கு உண்டு
 
                            "நீ "

சாதி பிணம்தின்னிகள்..........




பூக்க வேண்டிய  பூக்களை பரிக்கவில்லை அழித்துவிட்டார்கள்
பூமியில் பூக்கள் பூப்பதற்காக அல்லவ  படைக்கபட்டது 
மாற்றாக இடுகாட்டில் போசிக்கிவிட்டார்கள் ....
புதைக்கப்பட வேண்டிய சாதி என்ற எழுத்துக்கு
இது போல் எத்தனை பூக்களின் வாழ்கையை கருக்குவர்கள்...
பாரதியார் பாடிய பாடல்கள் அனைத்தும்
நாடு முழுவதும் ஒலித்தாலும் இவர்கள்
வருந்தா மாட்டார்கள்  அதை எண்ணி
என்றும் திருந்த மாட்டார்கள் !

சாதி பிணம்தின்னிகள்..........

ஈந தலைகள்












 தீராத மழைத்துளிகளில் காகித 
ஓடமாய் நனைந்து கீற்றின் 
அசைதலின் நிழலை கண்டு 
சிங்கம் அச்சத்தின் உச்சியில் 
புலிகளின் பாதங்களில் இடறிய 
சருககளின் ஓசையை கேட்டு 
பின் சலனமற்ற கர்ஜனையுடன் .....

  
 குகையின் வாசலில் தலை மட்டும் தெரிய
 அங்கும் இங்கும் உருண்ட கண்கள் உடன்
  உறுதி கொண்டு பின் நான் தலை என்று
  உணர்த்தி ஊருக்குள் வாழும்  ஈந  தலைகள்
  என்று விழும் மண்ணில்.................

 

 

 

 

வாழ்கைக்கு தேவவை ஊனம் இல்லை
மனம் என்றார்கள் ஆனால்
மனதை களைந்துவிட்டு நடக்கிறார்கள்
ஊனம்மை சிலர்
ஊனத்தை களைந்துவிட்டு மனதை கொண்டு
நடக்கிறார்கள் சிலர்.........