நிலவின் ஒளியை கண்டு




நிலவின் ஒளியை கண்டு
பூக்கும் பூக்கள் கண்டு
இப்படியாக எல்லாவற்றையும் கண்டு
வியந்தேன் உன்னை காண்பதற்கு முன் .
வியந்த எல்லாவற்றையும் வெறுத்தேன் கண்ட பின்.
வியந்தது சரியா வெறுத்தது தவறா
என் குறையா நான் உன்னை பார்த்த பிழையா ......
யார் சொல்வார்கள் தீர்ப்பை
அல்லது நீயே சொல்லிவிடு விடையை.

தொடரும் வலி


மோகத்தின் ஆட்டத்தில் நினைவை இழந்து
புதையல்யென நினைத்து புதைகுழிக்குள் இறங்கி 
தொலைத்தேன் என்னை 
ஆழத்தின் வலி அறியாமல் ஏதோ இதமான சுகத்திற்கு 
ஒரு முறை மறுமுறையென பலமுறை விழுந்தேன் 
பகிர்ந்த சுகம் சில கணங்கள் தான் 
இந்த கணம் வரை தொடரும் வலி எனக்கு மட்டுமே.......

அளவிட

  

அளவிட முடிந்தது இதயதின் துடிப்பை
முடியவில்லை நினைவை
அளவிட முடிந்தது குருதியின் ஓட்டத்தை
முடியவில்லை உணர்வை
அளவிட முடிந்தது பகலின் வெளிச்சம்
முடியவில்லை வாழ்கையின் இருளை
இப்படி அளந்து கொண்டு இருக்கிறான்
காலங்களைக்கடந்து....

மரம்

தனியாய் நின்ற
முதிர்மரத்தை கண்டு
நகைத்தது நாய் குடை
சில மணித்துளிகளில்
பட்டுபோவதை அறியாமல்.

அணைக்க தவறியது யார்??


அணைக்க தவறியது யார்??
எரியும் நெருப்பை அணைக்க தவறியது யார்??
எங்கும் கேட்கிறது கதறல் ஒலி
இன்னும்
குருதி வாடை விசுகிறது
பூக்களை தேடுவது சரியோ
இயந்திரமாய் வாழும் மக்களுக்கு
அன்பு என்பது பதம் மட்டும் தானோ
ஓடுகின்ற கழிவில் புழுவாய் நெளியும் உங்கள் வாக்கு உறுதிகள்
முதலைகளிடமிருந்து மீள இன்னும் எத்தனை காலம் ....

ஈன்று வளர்த்த தாய்க்கு .......


உறக்கம் இழந்த நம் கண்கள்
மழை காற்று கடும் வெயில்
பாராது உறவை தேடித்திரிந்தோம்
வழியெங்கும் ரத்தம் தெளித்த
தாய் திருநாட்டில் நம் இடம் எது ...?

ஈன்று வளர்த்த தாய்க்கு என்ன செய்தோம்
என்ற கணத்துடன் வாழும் எம் சொந்தமே ...
எழுவோம் வருவோம் காப்போம்
நம் தாய் மண்ணை மீட்போம்

உன் நினைவுகளுடன்


சிலிர்க்க செய்யும் காற்று
மெல்ல எட்டிபார்க்கும் சூரியன்
கரையை அலசும் நதி
சுமக்க முடியாத உன் நினைவுகளுடன்
காத்திருக்கிறேன் இன்னமும்

நண்பா உன் முகம்


முதலில் பார்த்தது என் தாய் முகம்
பிறகு பார்த்தது என் தகப்பன் முகம்
என்று காண்பேன் நண்பா உன் முகம்

நம் நட்பு


ஓரு போதும் சுற்றும் உலகம் நிற்பது இல்லை..
ஓரு போதும் வீசும் காற்று நிற்பது இல்லை..
ஓரு போதும் கரும்பின் சுவை மாறுவது இல்லை..
அது போல தான் நம் நட்பு ?

பூக்கள் பூத்து தீர்வது புதிது இல்லை ..
தேனிக்கள் தேன் சேர்ப்பது புதிது இல்லை ..
பூத்தலும் சேர்த்தலும் புதிது இல்லை..
ஆனால் நம் நட்பு அது போல இல்லை....

நமக்காக காத்திருக்கும்


அசைதலுக்கு காத்திருக்கும் மரம்...
மழைக்காக காத்திருக்கும் நிலம்..
உன் நட்பிற்கு காத்திருக்கும் நான்..
நமக்காக காத்திருக்கும் நட்பு..

உன்னை தேடுவது


கண்கள் நான் சொல்வதை காண்பது இல்லை
ஏன் என்று தெரியவில்லை
மழை நீர் மண்ணுக்கு வருவது புதிதில்லை
உன்னை தேடுவது கூட தான் நண்பா