..............இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு............





 

 ..............இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு............



நான் என்ற அகந்தையில் வாழ்கின்றனர்
மனம் என்ற ஆறு வரண்டு இருக்கிறது இங்கு
இருள் அடைந்த குகை ஆழம் அறிய
இவர்கள் மனமும் தான்

மிருகங்கள் கூட தனக்கு ஏற்ற
துணையை தேட மனிதனுள் மட்டும் ஏன்
கருவறையில் காத்து இருந்து பிறவாமல்
உதித்த அரக்கன்களோ

கடை விதியில் பூத்த பூக்கள் காத்துஇருக்க
அரும்பை நட்டவனுக்கு தெரியாமல்
அறுக்கின்றனர்

கடவுள் கூட இதை தடுக்க அவதாரம் எடுக்கவில்லை
பாவங்கள் பல செய்தும் சிறகு முளைத்த
பட்டாம்பூச்சி போல் அடுத்த பூக்களை தேடுகின்றனர்
இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு
    

திருமணம் என்ற பேரில்




 
தனித்து உறங்கினான் சில வருடம்
திடீர் என்று ஒரு நாள் எங்கு இருந்தோ
வந்தவனுடன் உறங்க சொல்கிறார்கள் 
திருமணம் என்ற பேரில்
விலைமாதுகள் கூட பணம் வாங்கிறார்கள்   
படுபதற்கு  முன் ஆனால் இங்கு பணம் வங்கி  தான் படுகிறார்கள்
சிலர் இன்புபுற்று இருக்க...    
சிலர் இன்னும் காத்திருக்கிறார்கள்  நிலை மாற ...

நீ




தேவதைகள் பூமிக்கு வருவது இல்லை
அதற்கு  ஒரு காரணம்  உண்டு
நட்சத்திரம் வானில் தெரிவது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு
நிலவு பூமிக்கு அருகில்  இருப்பது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு
பூக்கள் பூமியில் பூப்பது இல்லை
அதற்கும்   ஒரு காரணம் உண்டு

                         "நீ "


எழுதப்பட்ட காவியங்கள் பல இருந்தாலும்
எழுதபடாத காவியம் இங்கு உண்டு
கண்ணில்பட்ட அதிசயகள் பல இருந்தாலும்
கண்ணில்படாத அதிசயம் இங்கு உண்டு
கேட்கப்பட்ட குயிலின் ஓசை பல இருந்தாலும்
கேட்கபடாத குயிலின் ஓசை இங்கு உண்டு
திட்டப்பட்ட ஓவியம் பல இருந்தாலும்
வரையபடாத ஓவியம் இங்கு உண்டு
 
                            "நீ "

சாதி பிணம்தின்னிகள்..........




பூக்க வேண்டிய  பூக்களை பரிக்கவில்லை அழித்துவிட்டார்கள்
பூமியில் பூக்கள் பூப்பதற்காக அல்லவ  படைக்கபட்டது 
மாற்றாக இடுகாட்டில் போசிக்கிவிட்டார்கள் ....
புதைக்கப்பட வேண்டிய சாதி என்ற எழுத்துக்கு
இது போல் எத்தனை பூக்களின் வாழ்கையை கருக்குவர்கள்...
பாரதியார் பாடிய பாடல்கள் அனைத்தும்
நாடு முழுவதும் ஒலித்தாலும் இவர்கள்
வருந்தா மாட்டார்கள்  அதை எண்ணி
என்றும் திருந்த மாட்டார்கள் !

சாதி பிணம்தின்னிகள்..........

ஈந தலைகள்












 தீராத மழைத்துளிகளில் காகித 
ஓடமாய் நனைந்து கீற்றின் 
அசைதலின் நிழலை கண்டு 
சிங்கம் அச்சத்தின் உச்சியில் 
புலிகளின் பாதங்களில் இடறிய 
சருககளின் ஓசையை கேட்டு 
பின் சலனமற்ற கர்ஜனையுடன் .....

  
 குகையின் வாசலில் தலை மட்டும் தெரிய
 அங்கும் இங்கும் உருண்ட கண்கள் உடன்
  உறுதி கொண்டு பின் நான் தலை என்று
  உணர்த்தி ஊருக்குள் வாழும்  ஈந  தலைகள்
  என்று விழும் மண்ணில்.................

 

 

 

 

வாழ்கைக்கு தேவவை ஊனம் இல்லை
மனம் என்றார்கள் ஆனால்
மனதை களைந்துவிட்டு நடக்கிறார்கள்
ஊனம்மை சிலர்
ஊனத்தை களைந்துவிட்டு மனதை கொண்டு
நடக்கிறார்கள் சிலர்.........

அரக்கன்






 


நம்  நினைவுக்கு குட  எல்லையுண்டு
அனால் கடவுளுக்கு இல்லை ......
நம் அன்பிற்கும் எல்லையுண்டு
அனால்  தாய்க்கு  இல்லை ......
நம் கடலிற்கு எல்லையுண்டு
அனால் மீனுக்கு இல்லை ......
நம்  மூக்கிற்கு  எல்லையுண்டு
அனால் சுவாசிக்கும் காற்றுக்கு இல்லை ......
நம்  உண்ணவுகு எல்லையுண்டு
அனால் நெல்லிற்கு இல்லை ......
 நம் கேட்பதை  மட்டும் அளவு இல்லாமல்
 தானா கேட்கிறோம் கடவுளிடம் பிறகு  என்ன.
மனிதன் தெய்வமாக மாறவேண்டும்
மாறாக அரக்கன் ஆகிறான்

பூக்கள்



பூக்கள்  தினமும் பூப்பது உனக்கதான்
அனால் நீ அதை பார்ப்பது இல்லை பாவம்......
உன்னை பார்த்து மகிழ்ச்சி காலையில் மட்டும்தான்,
மாலையில்  இல்லை ............
இனி மறுநாள் காலைவரை காதிருக்க வேண்டும்
என்பதை நீனைத்து ஏங்கிய செடி.......
தினமும்  நீ எந்த பூவை பறிப்பாய் என்று காத்திருக்கும் இந்த செடி..........

தவழுகையில் இருகரங்களையும்

தவழுகையில் இருகரங்களையும்    இறுக்கியப்படி
நீண்ட தூரம் ஆயினும் அனைத்த படி
அவ்விரண்டு கரங்கள்
வாழ்வின் பாதி வரை வந்தது.
திடீர் என்று அவ்விரண்டு கரங்களை விலக்கி
வேறு கரம் உன்னை பிடிக்க வாழ்வின்
மீதிக்காக பற்றினாய்.
வந்த கரம்  பத்திரமாய் இங்கு இருக்க
வளர்த்த கரத்தை இங்கே   ஏந்தவிட்டது ஏன்

தெருவில் அந்த இருக்கரங்கள் ஏந்திய படி
இப்போதும் உன் நினைவில் வாழ்ந்த படி.......

முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?

முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?

நிலவின் ஒளியை கண்டு




நிலவின் ஒளியை கண்டு
பூக்கும் பூக்கள் கண்டு
இப்படியாக எல்லாவற்றையும் கண்டு
வியந்தேன் உன்னை காண்பதற்கு முன் .
வியந்த எல்லாவற்றையும் வெறுத்தேன் கண்ட பின்.
வியந்தது சரியா வெறுத்தது தவறா
என் குறையா நான் உன்னை பார்த்த பிழையா ......
யார் சொல்வார்கள் தீர்ப்பை
அல்லது நீயே சொல்லிவிடு விடையை.

தொடரும் வலி


மோகத்தின் ஆட்டத்தில் நினைவை இழந்து
புதையல்யென நினைத்து புதைகுழிக்குள் இறங்கி 
தொலைத்தேன் என்னை 
ஆழத்தின் வலி அறியாமல் ஏதோ இதமான சுகத்திற்கு 
ஒரு முறை மறுமுறையென பலமுறை விழுந்தேன் 
பகிர்ந்த சுகம் சில கணங்கள் தான் 
இந்த கணம் வரை தொடரும் வலி எனக்கு மட்டுமே.......

அளவிட

  

அளவிட முடிந்தது இதயதின் துடிப்பை
முடியவில்லை நினைவை
அளவிட முடிந்தது குருதியின் ஓட்டத்தை
முடியவில்லை உணர்வை
அளவிட முடிந்தது பகலின் வெளிச்சம்
முடியவில்லை வாழ்கையின் இருளை
இப்படி அளந்து கொண்டு இருக்கிறான்
காலங்களைக்கடந்து....

மரம்

தனியாய் நின்ற
முதிர்மரத்தை கண்டு
நகைத்தது நாய் குடை
சில மணித்துளிகளில்
பட்டுபோவதை அறியாமல்.

அணைக்க தவறியது யார்??


அணைக்க தவறியது யார்??
எரியும் நெருப்பை அணைக்க தவறியது யார்??
எங்கும் கேட்கிறது கதறல் ஒலி
இன்னும்
குருதி வாடை விசுகிறது
பூக்களை தேடுவது சரியோ
இயந்திரமாய் வாழும் மக்களுக்கு
அன்பு என்பது பதம் மட்டும் தானோ
ஓடுகின்ற கழிவில் புழுவாய் நெளியும் உங்கள் வாக்கு உறுதிகள்
முதலைகளிடமிருந்து மீள இன்னும் எத்தனை காலம் ....

ஈன்று வளர்த்த தாய்க்கு .......


உறக்கம் இழந்த நம் கண்கள்
மழை காற்று கடும் வெயில்
பாராது உறவை தேடித்திரிந்தோம்
வழியெங்கும் ரத்தம் தெளித்த
தாய் திருநாட்டில் நம் இடம் எது ...?

ஈன்று வளர்த்த தாய்க்கு என்ன செய்தோம்
என்ற கணத்துடன் வாழும் எம் சொந்தமே ...
எழுவோம் வருவோம் காப்போம்
நம் தாய் மண்ணை மீட்போம்

உன் நினைவுகளுடன்


சிலிர்க்க செய்யும் காற்று
மெல்ல எட்டிபார்க்கும் சூரியன்
கரையை அலசும் நதி
சுமக்க முடியாத உன் நினைவுகளுடன்
காத்திருக்கிறேன் இன்னமும்

நண்பா உன் முகம்


முதலில் பார்த்தது என் தாய் முகம்
பிறகு பார்த்தது என் தகப்பன் முகம்
என்று காண்பேன் நண்பா உன் முகம்